தளி - Thalli

தேன்கனிக்கோட்டை: மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டை: மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேயுள்ள பக்ரிசாயுபு கொள்ளை பகுதியை சேர்ந்தவர் இவரது மனைவி பத்திரமா (வயது 38). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் அங்குள்ள முனியப்பா என்பவரது தோட்டத்தில் பீன்ஸ் சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் மனைவி பத்திரமா தோட்டத்தில் பீன்ஸ் அறுவடை செய்த போது அந்த பகுதியில் திடீர் என்று மின்னல் மழை பெய்தது. அப்போது மின்னல் பத்திரமாவை தாக்கியதில் சம்பவ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்னர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பத்திரமாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறர்கள்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி
போச்சம்பள்ளி எம். ஜி. எம். பள்ளியில் உணவுத் திருவிழா
Oct 24, 2024, 15:10 IST/கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி எம். ஜி. எம். பள்ளியில் உணவுத் திருவிழா

Oct 24, 2024, 15:10 IST
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி எம். ஜி. எம். பள்ளியில் உணவுத் திருவிழா இன்று(அக்.24) சிறப்பாக நடைப்பெற்றது. பள்ளி சேர்மன் ஜி. பி. பன்னீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை ICICI வங்கி மேலாளர் அருண் துவக்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள் பல்வேறு வகையான பாரம்பரிய உணவுகளை தங்களது பெற்றோர்கள் உதவியுடன் தயார் செய்து கொண்டு வந்து கலந்து கொண்டனர். ஆசிரியர் குழு சிறந்த உணவுகளை கொண்டு வந்து அவற்றின் நன்மைகளை எடுத்துரைத்த மாணவர்களை வகுப்பு வாரியாக தேர்வு செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் செல்வராஜ் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சகீனா, சுகன்யா மற்றும் மேனகா ஆகியோர் செய்தனர்