கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் தனியார் எலக்ட்ரானிக் நிறுவனம் உள்ளது. அங்கு தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த கொத்தூரை சேர்ந்த முருகேசன் என்பவர் மேலாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி அன்று இரவு முருகேசன் பணியில் இருந்த போது நிறுவனத்தில் நுழைந்த சிறுவன் ஒருவன் இரும்பு கம்பிகளை திருடிச் செல்ல முயன்றான். இதனை பார்த்த முருகேசன் அருகில் அங்கிருந்தவர்களின் உதவியுடன் சிறுவனை பிடித்து ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் அந்த 17 வயது சிறுவன் தேன்கனிக்கோட்டை இருளப்பட்டி பகுதியை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர்.