குளச்சல் - Kulachal

குமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம்: மார்க்சிஸ்ட் கோரிக்கை

குமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம்: மார்க்சிஸ்ட் கோரிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிள்ளியூர் வட்டார செயலாளர் சாந்தகுமார் நேற்று(செப்.22) வெளியிட்ட அறிக்கையில், மணவாளகுறிச்சியில் இந்திய அபூர்வ மணல் ஆலை மூலம் மணல்களிலிருந்து இல்மனைட், தோரியம் போன்ற கனிமங்களை பிரித்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அன்னிய செலாவணியை ஈட்டி வருகின்றது. இதன் கதிர்வீச்சால் அதிக கேன்சர் நோயாளிகளை கொண்ட முதல்மாவட்டமாக குமரி மாறி வருகிறது. இந்த நிலையில் கிள்ளியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 1144 ஹெக்டேர் நிலப்பரப்பில் அணுசுரங்கம் அமைத்து அரிய மணலை எடுத்துச் செல்ல ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால் ராட்சச மிஷின்கள் கொண்டு மணல் உறிஞ்சப்படும். இதன் காரணமாக ஏராளமான வீடுகள் சேதமடையும், அனைத்து பிரிவு மக்களின் வாழ்விடங்கள் பறிக்கப்படும். குறிப்பாக மீனவ மக்கள் கடல் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே பாறைகள் சூறையாடபட்டு வருகின்றன. மறுபுறத்தில் குமரி மாவட்டத்தின் மணல் வளம் சூறையாடபட்டால் நிலத்தடி நீர் உப்பு நீராகும். கதிர்வீச்சின் காரணமாக மக்கள் நிரந்தர நோயாளியாக மாறுவார்கள். எனவே மாவட்ட மக்களின் நலன் கருதி அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிள்ளியூர் கிழக்கு வட்டார கமிட்டி சார்பில் வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా