லைக்குகளுக்கு ஆசைப்பட்டு, தன் குழந்தையின் உயிரை பணயம் வைத்து தாய் எடுத்த ரீல்ஸ் வீடியோ மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரீல்ஸ் மோகத்திலும், இணைய உலக பிரபலம் அடையும் மூர்க்கத்தனத்திலும் இப்பெண் அரங்கேற்றி இருக்கும் வீடியோ காண்போர் மனதை பதறச் செய்கிறது. கிணற்றின் விளிம்பில் அமர்ந்து கொண்டு, தன் குழந்தையை ஆபத்தான முறையில் கிணற்றுக்குள் தொங்கவிட்டு, இப்பெண் பதிவிட்ட ரீல்ஸ் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.