குளச்சல் - Kulachal

தக்கலை: ஓடும் பஸ்ஸில் மூதாட்டியின் பணம் செல்போன் மாயம்

தக்கலை: ஓடும் பஸ்ஸில் மூதாட்டியின் பணம் செல்போன் மாயம்

வில்லுக்குறி பகுதி கிழக்குதெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி புஷ்பம் (62). இவர் இன்று 10-ம் தேதி காலை தக்கலைச் செல்வதற்காக வில்லுக்குறியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் பஸ்சில் ஏறினார். அப்போது பஸ்சில் அதிக அளவில் கூட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம் தான் கொண்டு வந்த பர்ஸ் மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.  அந்த பர்சில் ரூபாய் ஐந்தாயிரம் மற்றும் ஒரு செல்போன் இருந்தது. இது குறித்து புஷ்பம் தக்கலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பணம், செல்போனை பர்சுடன் எடுத்துவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా