குளச்சல் - Kulachal

தாது மணல் பிரச்சனை: மீனவர்கள் கலெக்டரை சந்தித்து மனு

கன்னியாகுமரி மாவட்டம் மனவளக்குறிச்சியில் மத்திய அரசு சொந்தமான ஐ ஆர் இ எல் என்ற அரிய வகை மணல் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 600 டன் அணு கனிமங்களை உற்பத்தி செய்ய அனுமதியை பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கிளியூர் தொகுதிக்குட்பட்ட சில பகுதிகளில் 1144 ஹெக்டேரில் மண் எடுப்பதற்கான அறிவிப்பாணை  ஒன்றை மத்திய மாநில அரசுகள் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டமும் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பத்மநாதபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று (20-ம் தேதி) கடியப்பட்டணம் பகுதி மீனவர்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் ஏராளமானவர்கள் திரண்டு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரை சந்தித்து குமரி மாவட்டத்தில் மனவளக்குறிச்சி மணலாலையை ரத்து செய்ய வேண்டும், குமரியில் கனிம சுரங்கம் அமைக்க எடுத்துள்ள முடிவு சம்பந்தமாக கிராமம் வாரியாக கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా