5 வயது சிறுமிக்கு வெட்டு; 9 நாட்களுக்கு பின் வழக்குப்பதிவு
மேலகிருஷ்ணன் புதூரை சேர்ந்தவர் லதா (40). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சத்துணவு உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். லதாவின் முதல் கணவர் இறந்து விட்டார். இரண்டாவதாக வேறொருவரை அவர் திருமணம் செய்து கொண்டார். அவரும் இறந்து விட்டார். தற்போது ஐந்து வயது மகளுடன் அந்த பெண் தனியாக வாசித்து வந்தார். இந்த நிலையில் மூன்றாவதாக மீண்டும் ஈத்தாமொழி பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த உறவினர்கள் கண்டித்துள்ளனர். ஆனாலும் அவர்கள் தொடர்பு தொடர்பில் இருந்ததாக தெரிய வருகிறது. சம்பவ தினம் அந்த வாலிபருடன் லதா இருக்கும் போது, உறவினர்கள் திடீரென வீட்டில் புகுந்து லதாவை சரமாரியாக தாக்கினார்கள். அப்போது அங்கிருந்த அறிவாளால் அவரை வெட்ட முயன்ற போது, லதாவின் 5 வயது மகள் ரக்ஷதா தலையில் வெட்டு விழுந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சுசீந்திரம் போலீசில் லதா புகார் அளித்தார். புகார் அளித்து 9 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் நேற்று (29-ம் தேதி) சிறுமியை வெட்டிய மேலகிருஷ்ணன் புதூர் பகுதி சேர்ந்த ராஜா விஜய் (33) சுபின் (33) ஆகியோர் மீது 5 பிரிகளில் வழக்கு பதிவு செய்தனர்.