திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ள விவகாரம் பூதாகரமாக மாறியுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ள ஒரே மாதிரியான பதிவு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அப்பதிவில், "என் அம்மாவுக்கு கடந்த 2-3 வருடங்களாக திருப்பதி லட்டுவை சாப்பிட்ட பின் உடம்பு சரியில்லாமல் போனது., அதை அதிகம் சாப்பிட வேண்டாம் என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது புரிகிறது திருப்பதி லட்டில் ஏதோ தவறுள்ளது" என்று பதிவிடப்பட்டுள்ளது.