காஞ்சிபுரம்: சாலவாக்கத்தில் வாகனம் மோதி விபத்து; கீழே விழுந்த பெயர் பலகை
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் -- செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், ஆலப்பாக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராம எல்லை தொடங்கும் இடத்தில், நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையோரத்தில் கிராமத்தின் பெயர் ஒட்டப்பட்ட பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. வெளியூர்களிலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு, கிராமத்தின் பெயரை தெரிந்து கொள்ள, இந்த பெயர் பலகை பயன்பட்டு வந்தது. நேற்று முன்தினம் பெயர் பலகையின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, கீழே விழுந்து கிடக்கிறது. இதனால், வெளியூர்களிலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு, கிராமத்தை அடையாளம் காண சிரமமாக உள்ளது. எனவே, வாகனம் மோதி கீழே விழுந்து கிடக்கும் பெயர் பலகையை மீண்டும் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.