குரூப்-1 முதன்மை தேர்வு இன்று தொடக்கம்

85பார்த்தது
குரூப்-1 முதன்மை தேர்வு இன்று தொடக்கம்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சார் ஆட்சியர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 முதன்மை தேர்வு இன்று (டிச., 10) தொடங்குகிறது. இந்த தேர்வானது வருகிற 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சார் ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், வணிக வரி உதவி ஆணையர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கான முதல்நிவை தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது. இன்று நடக்கும் முதன்மை தேர்வை 1,888 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்.

தொடர்புடைய செய்தி