கல்பாக்கத்தில் உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

82பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினத்தில் கல்பாக்கம், புதுப்பட்டினம் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கமும் தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறையும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் புதுப்பட்டினம் ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்துல் நபில் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக திருக்கழுக்குன்றம் வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரசாத் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை பயிற்சியாளர் ஷரீப் ஆகியோர் கலந்து கொண்டு உணவு பாதுகாப்பு குறித்தும் உணவு தயாரிக்கும் முறையையும் ஒட்டல்கள் எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்தும் சங்க நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தனர் குறிப்பாக ஓட்டல் உணவகம் நடத்த உரிமம் பெறுவது மற்றும் தரமான உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது குறித்த பல்வேறு நடைமுறையில் உள்ள தகவல்களை விளக்கி கூறினர் பிளாஸ்டிக் ஒழிப்புடன் உணவருந்த வாழை இலைகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தினர் அதனைத் தொடர்ந்து பயிற்சியாளர் ஷரீப் கூறுகையில் உணவகங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் அங்கு பணிபுரியும் பணியாளர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கிக் கூறினார் நிகழ்ச்சியில் புதுப்பட்டினம் ஒட்டல் உரிமையாளர்கள் சங்க கௌரவ தலைவர் அனிபா பொருளாளர் அருணாச்சலம் செயலாளர் வெற்றி நிர்வாகி உமர் உள்ளிட்டோருடன் 100 க்கும் மேற்பட்ட உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி