அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் மனு

66பார்த்தது
அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு
செய்த நபர்கள் மீது உரிய
நடவடிக்கை எடுக்க
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம்
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள இந்தலூர் ஊராட்சியில் 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது.
இக்கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு
விவசாயம் பிரதான தொழிளாகும்.

இந்நிலையில் தனி நபர்கள்
விவசாய நிலங்களுக்கு ஈடுபொருள்
கொண்டு செல்லும் பாதை அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்ததாக
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

புகார் மனு பெற்றுக்கொண்ட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள்
காவல் நிலையத்திலிருந்து
கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும்
பரபரப்பு நிலவியது. மேலும்
இது குறித்து செங்கல்பட்டு
மாவட்ட ஆட்சியரிடம் தனி நபர்கள்
மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆக்கிரமிப்பு செய்த விவசாய நிலங்களை மீட்டு எடுக்கவும் கோரிக்கை மனு வழங்கியதாக தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி