செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அப்படி சுற்றுலா பயணிகள் போர்வையில் வரும் சமூக விரோதிகள் பலர் புராதன சின்னங்களில் சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளின் செல்போன், உடைமைகளை திருடுவது, பெண்களை கிண்டல் செய்வது, குடிபோதையில் தொல்லியல் துறை பணியாளர்களிடம் சண்டை போடுவது போன்ற செயல்களில் இனி யாராவது ஈடுபட்டால் பாடி கேமராவுடன் ரோந்து பணி தொடங்கியுள்ள போலீசாரிடம் சிக்கும் நிலை ஏற்படும். 10 மீட்டர் தூரம் துள்ளியமாக வீடியோ எடுக்கும் அதிநவீன கேமிரா சட்டையில் பொறுத்தியுள்ள 8 போலீசார் கடற்கரை கோயில், ஐந்துரதம, அர்ச்சுணன் தபசு போன்ற புராதன சின்னங்களில் ரோந்து வருவார்கள்.
சுற்றுலா வரும் வாலிபர்கள் போலீசார் முன்னிலையில் மது போதையில் இரு கோஷ்டிகளாக தாக்கி கொண்டாலே, ரகலையில் ஈடுபட்டாலோ போலீசாரின் சட்டை பையில் பொறுத்தி உள்ள காமிரா மூலம் தவறு செய்தவர்கள் யார் என்று உடனடியாக வீடியோ ஆதாரத்துடன் போலீசார் நடவடிக்கை எடுக்க வழிவகை ஏற்படும் என்று போலீசார் தெரிவித்தனர். கடற்கரை கோயில் வளாகம், பஸ் நிலையம் பகுதியில் சட்டையில் பாடி கேமரா அணிந்து ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரின் பணிகளை மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் நேரில் வந்து பார்வையிட்டு அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.