செய்யூர் அருகே 20 ஏக்கர் நடப்பட்டிருந்த வீரிய ஒட்டு ரக பப்பாளி மரங்கள் புயல் காற்றால் சேதம்15 லட்ச ரூபாய் இழப்பு
விவசாயிகள் வேதனை
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகாவில் உள்ள
விழுதமங்கலம் கிராமத்தில் சுமார் 20 ஏக்கரில் வீரிய ஒட்டு ரக பப்பாளி மரங்கள் நடப்பட்டு சொட்டு நீர் பாசனம் மூலம் பயிர் செய்யப்பட்டன
தற்போது அவை யாவும் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நேற்று முன்தினம் அடித்த பெஞ்சல் புயல் மற்றும் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மரங்கள் அனைத்தும் சாய்ந்துள்ளனஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் என வங்கி மற்றும் நகை கடன் மூலம் கடன் பெற்று சுமார் 20 லட்சம் ரூபாய் செலவு செய்து பயிரிடப்பட்ட பப்பாளி பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்து உள்ளது இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.