படத்தில் பெரிய ஹீரோவாக நடித்துவிட்டு, மக்களை சந்தித்தாள் வாக்கு வாங்கி விடலாம் என்ற எண்ணம் என்பது கிடையாது,
கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பலமான கொள்கை கூட்டணி தொடர்ந்து வருவதால் கூட்டணியை பார்த்து உடைந்து விட வேண்டுமென சிலர் நினைக்கிறார்கள் அதனால் தான் வயித்தெரிச்சலில் விஜய் பேசுகிறார்,
நடிகர் விஜய் விசிக தலைவர் தொல் திருமாவளவன் அழைத்து வரலால் வயிற்று எரிச்சலில் இப்படி பேசுகிறார்,
மன்னராட்சி என்றெல்லாம் என்பது கிடையாது, இங்கே யாரும் முடி சூடவில்லை இது அரசியலைப் பற்றி தெரியாத ஒரு நபர் பேச்சு போல் உள்ளது, இது குடியாட்சி மக்களை நேரடியாக சந்தித்து மக்களிடம் வாக்கு பெற்று சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,
விஜய் முதலில் தேர்தலில் நின்று ஒரு கவுன்சிலராகவாவது ஆகட்டும்,
உதயநிதி தலைவரைப் பற்றி பேசினால் பிரபலமாகிவிடலாம் என்பதற்காக பேசி வருகிறார்,
மழையில் முதலமைச்சர் அனைவரையும் வீட்டில் இருந்து பணியாற்றும்படி (work from home) சொன்னார் ஆனால் நடிகர் விஜய் மக்களையே வீட்டில் இருந்து தான் சந்திக்கிறார், நலத்திட்டத்தை கூட work from Home போல தான் கொடுக்கிறார், அவ்ளோ பெரிய வெள்ளத்தில் மக்களை சந்திக்காத நபர் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என திமுக மாணவர் அணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன் எம்எல்ஏ பேட்டி