செங்கல்பட்டு மாவட்டம் கீழ மருவத்தூர் ஊராட்சியில் இருந்து வெங்கடேச புரம் செல்லும் சாலையில் வயல்வெளி பகுதியில் சுமார் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் அரசு மதுபான கடை இந்த கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடையை திறக்க விடாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த கடை மேல்மருவத்தூரில் இருந்து வெங்கடேசபுரம் செல்லும் விவசாய பயன்பாட்டில் உள்ள சாலையில் இந்த கடை இயங்கி வருகிறது
இந்த கடை இங்கு இருப்பதினால் முக்கியமாக கடையில் மது வாங்கும் மது பிரியர்கள் கடை முன்பு சாலையிலேயே உட்கார்ந்து குடிப்பதும் குடித்த மது பாட்டில்களை சாலையில் போட்டு உடைப்பதும் வாகனங்களுக்கு இடைவிடாமல் வாகனங்களை நிறுத்தி விட்டு ஆங்காங்கே மது அருந்தி கொண்டு இருப்பதனால் அவ்வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கும் விவசாய வேலைகளுக்கு செல்லும் பெண்களுக்கும் பெரும் இடையூறாகவும் பாட்டில்கள் பிளாஸ்டிக் கழிவுகள் அங்கேயே போட்டுவிட்டு செல்வதால் விவசாய நிலங்கள் சீர்கெட்டு போவதாகவும் குற்றம் சாட்டி இந்த கடையை இந்த இடத்தில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என சுமார் 2 மணி நேரமாக கடையை திறக்க விடாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு உள்ளனர்.