காஞ்சிபுரத்தில் 41வது வார்டில் உள்ள ஜெம் நகரில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வரும் குடிமகன்களால் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக கூறி புலம்பும் பொது மக்கள் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். வீடுகளுக்கு முன்பு வாகனங்களை நிறுத்திவிட்டு குடிமகன்கள் வாந்தி எடுப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.