மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

84பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுறுலா மையமான மாமல்லபுரத்தில் அதிகளவில் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகளை இங்கு வரவழைக்கும் வகையில் மத்திய, மாநில சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. இதையடுத்து சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், தமிழக சுற்றுலாத்துறை ஆணையர் ஷில்பாபிரபாகர்சதீஷ் ஆகியோர் அத்துறை அதிகாரிகளுடன் வந்து ஆய்வு செய்தனர்.
மேலும் கர்நாடகா பெங்கலூர் அருகே நீச்சல் குளத்தில் சுற்றுலா வந்த பெண்கள் நீச்சல் தெரியாமல் மூழ்கி, இறந்ததை முன் உதாரணமாக கொண்டு இங்குள்ள நீச்சல் குளத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், சுற்றுலா பயணிகள் குளிக்கும்போது நீச்சல் குள பராமரிப்பாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடு படவேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.



மேலும் மாமல்லபுரம் கடற்கரை சாலையில் பாழடைந்து உள்ள சுற்றுலா வளர்ச்சி் கழக விடுதியை ஆய்வு செய்த அமைச்சர் அதனை சீரமைக்க தயாரிக்கப்பட்ட வரைபடத்தை கொண்டு ஆய்வு செய்தார் ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி