செங்கையில் சிறுமியை பாலியல் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

71பார்த்தது
7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் - ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

செங்கல்பட்டு அடுத்த பொன். விளைந்த களத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த வேதகிரி என்பவரின் மகன் கார்த்திக் (37) இவர் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 2020 ஆம் ஆண்டு கார்த்திக் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்

பாதிக்கப்பட்ட சிறுமி அமுதுக்கொண்டே நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அரசு தரப்பு வழக்கறிஞர் மைதிலிதேவி ஆஜரானார் வழக்கை விசாரித்த நீதிபதி நசிமாபானு குற்றவாளி கார்த்திக்கு ஆயுள் தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தீரப்பு வழங்கினார் இதனை தொடர்ந்து குற்வாளி கார்த்திக் போலீசார் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி