செங்கல்பட்டு - தாம்பரம் மாநகர பேருந்தின் படி கதவுகள் திறந்தபடியே விபத்தை விளைவிக்கும் வகையில் சென்ற பேருந்தின் வீடியோ காட்சிகள் வைரல்
செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரை செல்லும் தடம் எண் 500 கொண்ட மாநகர பேருந்துகள் தினசரி அதிகாலை முதல் இரவு 10-மணி வரை 10-நிமிடத்திற்கு ஒருமுறை சென்று வருகிறது. இந்த பேருந்துகளில் படிகட்டுகளுக்கு ஹைட்ராலிக் கதவுகள் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கதவை திறப்பதற்கும் மூடுவதற்கும் டிரைவரின் கண்ட்ரோலில் சுவிட்ச் உள்ளது. அதனால் அந்த பேருந்து நிறுத்தம் வந்ததும் டிரைவரின் கண்ட்ரோலில் இருந்து படிக்கட்டு கதவுகள் திறக்கப்படும். பயணிகள் இறங்கி ஏறியவுடன் மீண்டும் டிரைவர் தனது கண்ட்ரோலில் கதவை மூடிவிடுவார்.
இந்நிலையில் இன்று செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற தடம் எண் 500 கொண்ட மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது அந்த பேருந்தில் இருந்த ஹைட்ராலிக் கதவுகள் பழுதாகி கதவை மூட முடியாமல் கதவின் முழு பகுதியும் பேருந்தின் வெளியே நீட்டிக்கொண்டு சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பின்னால் வரும் வாகனங்கள் பேருந்தை ஒட்டி வரும்போது கவனக்குறைவால் கதவில் மோதி விபத்து ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது.