திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் கிராமத்தில் மதுபோதையில் கிணற்றில் குளிக்க சென்ற வாலிபர் உயிரிழப்பு,
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த செந்தில்,
ஆட்டோவில் தனது நண்பர்கள் நான்கு பேருடன் செங்கல்பட்டில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்று ஐயப்பன் மாலையை கழட்டிவிட்டு நண்பர்களுடன் செங்கல்பட்டில் மது அருந்தியுள்ளனர்,
அதன் பின்பு,
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கரும்பாக்கத்தில் உள்ள கிணற்றின் அருகே மீண்டும் மது அருந்தி விட்டு கிணற்றில் குளித்துள்ளனர்,
நான்கு நபருடன் வந்த செந்தில், மது போதையில் கிணற்றுக்குள் குதித்துள்ளார்.
நீண்ட நேரமாக வெளிவரவில்லை இதனைக் கண்ட சக நண்பர்கள், திருப்போரூர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்ததின் பேரில்,
செங்கல்பட்டு தீயணைப்பு துறையினர் மூலம் செந்தில், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்,
மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.