இந்தியாவில் பாம்புகளே இல்லாத மாநிலம் எது தெரியுமா?

இந்தியாவில் பாம்புகளே இல்லாத மாநிலமாக லட்சத்தீவு விளங்கி வருகிறது. இது 36 சிறிய தீவுகளால் ஆன யூனியன் பிரதேசமாகும். இங்கு மொத்த மக்கள் தொகை 64,000 மட்டுமே. இங்கு ஒரு பாம்புகள் கூட காணப்படுவதில்லை. அதே போல் நாய்களும் காணப்படுவதில்லை. லட்சத்தீவு நிர்வாகம் பாம்பு மற்றும் நாய்கள் இல்லாத தீவாக தங்கள் தீவை வைத்துக்கொள்ள தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது. லட்சத்தீவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் நாய்களை உடன் அழைத்து வர அனுமதிக்கப்படுவதில்லை.