மேல்மருவத்தூரில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

53பார்த்தது
மேல்மருவத்தூர்
ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் மாவட்ட அளவில் ஆன விளையாட்டுப் போட்டிகள்


செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு மாவட்ட அளவிலான மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் இயக்கத் தலைவர் கோ. ப. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த விளையாட்டு போட்டியில் கபடி, வாலிபால், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடம் பிடித்த விளையாட்டு வீரர்களுக்கு பரிசு பொருள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இந்த விளையாட்டு போட்டியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கான ஏற்பாட்டினை ஆன்மீக மக்கள் தொண்டர் இயக்கத்தினர் சிறப்பாக செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அகத்தியன், மக்கள் தொண்டு இயக்க நிர்வாகிகள் கலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி