மேல்மருவத்தூர் கோவில் பக்தர்கள் வந்த கர்நாடகா அரசு பேருந்து மீது அரசு சொகுசு பேருந்து மோதி விபத்து.
கர்நாடகாபக்தர்கள் ஐந்து பேர் காயம்.
போக்குவரத்து பாதிப்பு.
செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடகா மாநிலத்திலிருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு செங்கல்பட்டு நோக்கி சென்ற இப்பொழுது மாமண்டூர் அருகே முன்னாள் சென்ற வாகனம் திடீரென நின்ற நிலையில் வாகனம் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி உள்ளார்
அப்போது நாகர்கோவில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு சொகுசு பேருந்து நின்று கொண்டிருந்த கர்நாடகா அரசு பேருந்து மீது பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது இதில் பேருந்தில் பின் வரிசையில் அமர்ந்திருந்த கர்நாடக பக்தர்கள் ஐந்து பேர் லேசான காயம் அடைந்தனர் இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.