பள்ளிகள் அரையாண்டு விடுமுறை முடிந்து சென்னை நோக்கி பொதுமக்கள் படையெடுத்து செல்வதால் ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்.
அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்க உள்ளதால் தென் மாவட்டங்களை நோக்கி சென்ற பொதுமக்கள் ஒரே நாளில் சென்னையை நோக்கி பொதுமக்கள் படையெடுப்பதால் செங்கல்பட்டு மாவட்டத்தின் நுழைவு வாயிலாக உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஆனது ஏற்பட்டுள்ளது.
இந்த கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வாகனங்களை இயக்கி வருகின்றனர். ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் மற்றும் அச்சரப்பாக்கம் போலீசார் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.