பரந்தூரில் போராடும் மக்களை தவெக தலைவர் விஜய் சந்திக்கும் நிலையில் அங்குள்ள மக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி பேசினார். நான் உங்களுடன் உறுதியாக நிற்பேன், மத்திய, மாநில அரசுகளுக்கு ஒன்றை சொல்கிறேன். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை. நமக்கு விமான நிலையம் வேண்டும். ஆனால் இங்கு வேண்டாம். எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு, இப்போது எதிர்ப்பா. நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடிகள் என்றார்.