காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களை தவெக தலைவர் விஜய் இன்று (ஜன.20) சந்திக்கிறார். கூட்டம் நடைபெறும் இடத்திற்கு, பிரச்சார வாகனத்தில் பறந்து வந்த விஜய், ஊருக்குள் நுழைந்ததும், வாகனத்தின் மீது ஏறி நின்று தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி, வருகிறார். தொண்டர்கள் கொடுத்த துண்டை கழுத்தில் போட்டுக்கொண்ட விஜய், கையில் கட்சி கொடியுடன் உற்சாகமாக மக்களைச் சந்தித்து வருகிறார்.