திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடுகல் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரர்கள் பொறிக்கப்பட்ட நடுகல்லாகும். 6 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட இந்த கல்லில் இரண்டு வீரர்கள் எதிரெதிர் மோதிக்கொள்ளும் போர் நிகழ்வு சித்தரிக்கப்பட்டுள்ளது. இரு வீரர்களும் பக்கவாட்டில் சரிந்த கொண்டையுடன், சரபளி என்ற ஆபரணமும், கால்களில் கழலும், கைகளில் பூணும் அணிந்துள்ளனர்.