செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் சார்பாக அச்சரப்பாக்கம் பஜார் வீதியில் காசநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் தனியார் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காசநோய் குறித்து பதாகைகள் ஏந்தியவாறு அச்சரப்பாக்கம் பஜார் வீதியில் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள், வட்டார மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.