செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த காலவாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழக திருப்போரூர் ஒன்றிய பொறுப்பாளர் தையூர் தீனா ஏற்பாட்டில் 400 க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு பையாக பச்சரிசி, 2 கிலோ வெல்லம், முந்திரி திராட்சை நெய் உள்ளிட்ட பொருட்களுடன் 500 ரூபாய் ரொக்கம், சேலை முழு கரும்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சூரியநாராயணன் கலந்து கொண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பினை வழங்கினார் அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள் ஆளும் கட்சி பொங்கலுக்கு வழங்கும் உதவித்தொகையை நிறுத்திவிட்டதாகவும் இது குறித்து தளபதி விஜய்யிடம் பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகள் செய்யப் போகிறோம் என்று சொன்னதற்கு தாராளமாக செய்யுங்க என சொன்னதாகவும் முடிந்தவரை த வெ க சார்பில் நலத்திட்டங்கள் வழங்க இருக்கிறோம் என்றவர் தளபதி விஜய் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது அதனால் எதிர்வரும் 2026 தமிழக முதல்வராக தளபதி விஜய் அமர்வார் அதற்கான பயணத்தை முன்னெடுத்து பணி செய்து வருகிறோம் என்றார் நிகழ்வில்
மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி, மோகன், ராஜா, ஜான் ராஜேஷ், ஷிபா உள்ளிட்டோருடன் திருப்போரூர் ஒன்றிய கழக நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மகளிரணி பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.