செங்கல்பட்டில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை...!!

59பார்த்தது
ஆன்லைன் செயலியில் வாங்கிய கடனை கட்ட முடியாததால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை.!!


சென்னை புறநகர் பகுதியான சிங்கப்பெருமாள் கோவில் அருகே வசித்து வந்தவர் தங்கராஜ் வயது 32 இவர் மகேந்திரா சிட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்

இந்த நிலையில் தங்கராஜ் அடிக்கடி ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றுக் கொண்டு பின்பு கட்டி வருவார் எனக் கூறப்படுகிறது

இந்த நிலையில் தற்போது ஆன்லைன் செயலியில் அதிக கடன் பெற்றுள்ள நிலையில் அதனை தவண தேதியில் கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார் இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது அறையில் சென்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

பின்பு அவரது அறை நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது தங்கராஜ் தூக்கில் தொங்கியபடி நின்று கொண்டிருந்தார் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்த பெற்றோர் உடனடியாக மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்பு தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.!

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி