திண்டுக்கல்லில் கடந்த 2016ல் நடந்த சட்டசபை தேர்தல் பொதுக்கூட்டத்தில் இரவு 10:00 மணிக்கு மேல் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாவட்ட செயலாளர் செல்வராகவன் உட்பட கூட்டணி கட்சியினர் 12 பேர் மீது திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஜனவரி 7ஆம் தேதி வைகோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக அவர் இன்று (ஜன. 20) ஆஜரானார்.