திருக்கழுக்குன்றத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா

78பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய தாழம்பேடு மேலேரிப்பாக்கம் மோசிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 55 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தை திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி முன்னிலையில் பள்ளி மாணவ மாணவியரும் தலைமை ஆசிரியரும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

அதனைத் தொடர்ந்து எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி குத்துவிளக்கேற்றி வைத்து மாணவ மாணவியரின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து நியாயவிலை கடைகளை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களையும் பொங்கல் கூப்பனையும் வழங்கினார். 

மோசிவாக்கம் பகுதியில் ரேஷன் பொருட்களை வழங்கிய எம்எல்ஏ பாலாஜி அருகாமையில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர் டி அரசு, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார், திருக்கழுக்குன்றம் பிடிஓ பாஸ்கரன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி