திருக்கழுக்குன்றத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

53பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மார்க்கெட் பகுதியிலிருந்து நெரும்பூர் வரை போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் திருக்கழுக்குன்றம் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது இதனால் பேருந்து வசதி இல்லாததால் பெரும்பாலான மக்கள் ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனர் திருக்கழுக்குன்றம் மார்க்கெட்டில் இருந்து நெரும்பூர் வரை சுமார் 50க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றி செல்கிறது இதில் மூன்று ஷேர் ஆட்டோக்களை சேர்ந்தவர்கள் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர்கள் மீதமுள்ள ஆட்டோக்கள் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தது இதனால் திருக்கழுக்குன்றம் முதல் நெரும்பூர் வரை சென்று திரும்பும் ஆட்டோக்களை வரிசையில் நிற்க விடாமல் உள்ளூரை சேர்ந்த 3 ஆட்டோக்காரர்கள் மட்டும் சென்று திரும்பியவுடன் மீண்டும் பயணிகளை ஏற்றி செல்கின்றனர் இதனால் பின் தொடர்ந்து நிற்கும் ஆட்டோக்கள் இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் இழந்து ஆட்டோவிற்கு வாடகை கொடுக்காத நிலை உருவாகியுள்ளது மேலும் தாங்கள் கடன் பெற்று வாங்கிய ஆட்டோக்களுக்கு மாத தவணை செலுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி