மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் அமெரிக்கா மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும், 70 நாடுகளை சேர்ந்த 250 வெளிநாட்டு பயணிகள்(மென்பொறியாளர்கள்) ஒரே நேரத்தில் திரண்டனர். அவர்கள் அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து ரசித்தனர்.
அமெரிக்கா மென்பொருள் நிறுவனத்தில் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன், நார்வே, கிரீஸ், போர்ச்சுகல், ரஷ்யா, சுவீஸ், பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, டென்மார்க், கனடா, சீனா, இலங்கை, உள்ளிட்ட 70 நாடுகளை சேர்ந்த (மென்பொறியாளர்கள்)வெளிநாட்டு பயணிகள் ஒரு குழுவாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற நகரமான மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் 250 பேரும் ஐந்துரதம் பகுதிக்கு சென்று அங்குள்ள பல்லவர் கால ஒற்றைக்கல் ரதங்களை கண்டுகளித்து புகைப்படம் எடுத்து ரசித்தனர். பிறகு கடற்கரை கோயில், வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பல மொழிகள் பேசும் 70 நாட்டவர் ஒரே நேரத்தில் மாமல்லபுரத்தில் திரண்டு புராதன சின்னங்களை ரசித்து பார்த்த காட்சி காண்போரை வியக்க வைத்தது. வெளிநாட்டவர் 250 பேரும் பணிபுரியும் ஐ. டி. நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ள நிறுவனம் என்று கூறப்படுகிறது.