செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதிகளில் கள்ளத்தனமாக பல கிராமப் பகுதிகளில் வெளி மாநில மற்றும் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி ரகசியமாக விற்பனை செய்து வருகின்றனர். சட்டவிரோதமாக மது மதுபாட்டில்களை மதுவிலக்கு காவல்துறையினர் கண்டுபிடித்து விற்பனை செய்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் மூலம் தண்டனை பெறுகின்றனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவின் பேரில் மதுவிலக்கு காவல்துறையினர் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் மற்றும் பனைமரக்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் சிறைக்கு செல்ல நேரிடும், சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50 ஆயிரம் அபராதம் மற்றும் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என வாசகங்கள் அடங்கிய வால்போஸ்டர்கள் அடித்து மதுவிலக்கம், சூனாம்பேடு, செய்யூர், முதலியார்குப்பம், நயினார்குப்பம் என பனைமரக்கள் அதிகமாக உள்ள கிராமங்களிலும் பொதுமக்கள் பார்வையில் படும்படி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
குற்றம் செய்பவர்களுக்கு எச்சரிக்கையாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த போஸ்டர்கள் அமைந்துள்ளது.