காஞ்சிபுரம் மாநகராட்சி திருச்சக்கரபுரம் தெரு வழியாக சங்கூசாபேட்டை, பேருந்து நிலையம், ரயில் நிலையம், ரெட்டிபேட்டை, மின்நகர், அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில், இரு மாதங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவமழையால், 30 மீட்டர் நீளத்திற்கு ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, சாலை சேதமடைந்து பல்லாங்குழியாக மாறியுள்ளது. போக்குவரத்திற்கு ஏதுவாகாத நிலையில் உள்ள சாலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக, சைக்கிளில் செல்லும் மாணவர்கள் மாணவிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, திருச்சக்கரபுரம் தெருவில் சேதமடைந்த சாலையை 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.