ஆலந்தூர் - Alandur

கேளம்பாக்கத்தில் திருட்டு இரு வாலிபர்கள் கைது

கேளம்பாக்கத்தில் திருட்டு இரு வாலிபர்கள் கைது

திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கேளம்பாக்கம் ஊராட்சியில், கேளம்பாக்கம், சாத்தங்குப்பம், ஓ. எம். ஆர். , சாலை, வீராணம் சாலை பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு கேளம்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12: 00 மணியளவில், இரண்டு மர்ம நபர்கள், கேளம்பாக்கம் மளிகை கடையின் பூட்டை உடைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மளிகை கடை வழியாக சென்றனர். அப்போது, போலீசாரை பார்த்ததும் மர்ம நபர்கள் பைக்கில் தப்ப முயன்றனர். போலீசார் அவர்களை துரத்தி சென்றபோது, ராஜேஸ்வரி நகரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சிமென்ட் கலவை இயந்திரத்தில் மோதி, இருவரும் கீழே விழுந்தனர். போலீசாரும், அங்கிருந்த பொதுமக்களும் மர்ம நபர்களை மடக்கிப் பிடித்தனர். இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. அதில், கண்ணகி நகரை சேர்ந்த பிரதீப்ராஜ், 24, திவாகர், 25, என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து இரு பைக்கை பறிமுதல் செய்தனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా