செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியில் அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாநில அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்துகொண்டு பள்ளி செல்லும் 10 மாணவர்களுக்கு ரேஞ்சர் சைக்கிள்களும், சலவைத் தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, 50 க்கும் மேற்பட்ட இருளர் இன மக்களுக்கு இலவச அரிசி, மற்றும் வேட்டி சேலை, பொதுமக்களில் 500 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவச வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.