நெல்லையில் கடந்த சில தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஜாகிர் உசேன் பிஜிலி வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று(மார்ச் 22) காலை ஜாகிர் உசேனின் மகன், தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை என வீடியோ வெளியிட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் வீட்டின் முன் 24 மணி நேரமும் துப்பாக்கியுடன் கூடிய காவலர்கள் பணியில் இருக்கும்படி நெல்லை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.