செங்கல்பட்டு மாவட்டம்
திருப்போரூர் அருகே ரவுண்ட் அண்ணா அருகில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்தில் ஏர்போர்ட் மூர்த்தி கலந்து கலந்துகொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எதிராக அவதூறு வார்த்தைகளை பேச வருவதாகவும் இதனை அறிந்த விசிகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்து ஏர்போர்ட் மூர்த்திக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தி இருந்தனர்.
இதனை அறிந்த மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருப்போரூர் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் குவிந்துள்ளனர். பின்னர் விசிகவினர் ஏர்போர்ட் மூர்த்தி வருவதை அறிந்து போராட்ட களத்தில் ஈடுபட முயற்சித்தபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவல்துறைக்கும் விசிகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி சாய் பிரனீத் நேரடியா திருமாவளவனுக்கு அலைபேசியில் அழைத்து போராட்டக் களத்தில் ஈடுபடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போராட்டக் களத்தில் ஈடுபடாமல் கலைந்து போக கூறியும், ஒருவேளை ஏர்போர்ட் மூர்த்தி தரைக்குறைவான வார்த்தைகளால் பேசினார் அவர் மீது புகார் கொடுத்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதாக கேட்டுக்கொண்டதன் பேரில், கட்சி நிர்வாகிகளிடம் திருமாவளவன் ஏர்போர்ட் மூர்த்திக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்த வேண்டாம் என்று அலைபேசி மூலமாக கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.