திருக்கழுக்குன்றத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

76பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தனியார் திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது சிறப்பு அமைப்பாளராக காஞ்சி வடக்கு மாவட்ட செயலரும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா மோ அன்பரசன் கலந்துகொண்டு நிர்வாகிகளிடையே சிறப்புரை ஆற்றினார் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமைச்சர் முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் மாவட்ட பொருளாளர் விசுவநாதன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார் திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு பெருந்தலைவர் அரசு துணைத் தலைவர் பச்சையப்பன் மாவட்ட கவுன்சிலர் ஆர் கே ரமேஷ் ஒன்றிய பொருளாளர் தனசேகர் திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் கே கே பூபதி, சுரேஷ் திருக்கழுக்குன்றம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் கரியசேரி சேகர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பரந்தாமன் உட்பட மாவட்ட ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள் அனைத்து அணி நிர்வாகிகள் மகளிர் அணி பொறுப்பாளர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி