சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

62பார்த்தது
சென்னை விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த திரவ நிலையில் ஆன வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடித்து சிதறும் என்றும், அதிகாலை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்துக்கு ஒரு மர்ம ஈமெயில் குறுந்தகவல் வந்திருந்தது. வெளிநாட்டில் இருந்து அனிமியா பேகம் என்ற சமூக வலைதளம் மூலம் இந்த மிரட்டல் ஈமெயில் போடப்பட்டிருந்தது. உடனடியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிர்வாகத்தில் இருந்து, சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகம் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய பாதுகாப்பு கமிட்டியின் கூட்டம், அவசரமாக சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்தில் கூடி, இது பற்றி அவசர ஆலோசனை நடத்தினர். அதோடு விமான நிலையத்தின் அனைத்து பகுதிகள், குறிப்பாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ஆகியவைகளை முழுமையாக சோதனை நடத்த முடிவெடுக்கப்பட்டது.

இதை அடுத்து சென்னை விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடி படையினர், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து அந்தமான், டெல்லி, மும்பை உள்ளிட்ட சில இடங்களுக்கு புறப்பட இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்களிலும், சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகள் நீண்ட நேரம் நடந்தது. ஆனால் வெடிகுண்டுகள் மற்றும் மர்ம பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி