ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டம் பலிச்சா பகுதியில் ஒரு நபர் ஒருவர் தனது பைக்கில் செயினை மாட்டி மறுமுனையை நாயின் கழுத்தில் கட்டி தரதரவென இழுத்து வந்தார். இதில் நாய்க்கு ரத்தம் சொட்ட சொட்ட ஊற்றியது. மேலும் அந்த நாய் வலி தாங்க முடியாமல் கூக்குரலிட்டது. இதைப்பார்த்த அப்பகுதி பெண் ஒருவர் அந்த நபரை சரமாரியான கேள்விகளால் வெளுத்து வாங்கினார். இதையடுத்து அந்த நபர் நாயின் கழுத்தில் இருந்து செயினை அகற்றி அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.