பூமியில் வாழும் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ நீர் இன்றியமையாதது என்பதால் நீரை வீணாக்கக் கூடாது. நீர் பற்றாக்குறையினால் விவசாயம், தொழிற்சாலைகள் போன்றவை இயங்குவதில் பாதிப்பு ஏற்படும். உற்பத்தி பாதிக்கப்படும்போது பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு, நாம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை பெரும்பாலும் அதிகமாகும்.