திருப்போரூர் ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயிலில் தெப்பத் திருவிழா

80பார்த்தது
திருப்போரூர் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ பெருவிழாவின் 9 ஆம் நாளான தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டுக்கான பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது இதையடுத்து, நாள்தோறும் காலை மற்றும் மாலை வேலையில் அருள்மிகு கந்தசுவாமி பெருமான் வீதியுலா வரும் உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்றன அதன் படி 9 ஆம் நாளான இன்று சரவண பொய்கை குளத்தில் அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி பெருமான் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் அதனைத் தொடர்ந்து 15 ஆம் தேதி அதிகாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் செயல் அலுவலர் குமரவேல் தலைமையில் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி