விழுப்புரம்: திமுக சார்பில் மாணவர்களுக்கு நோட்டு வழங்கிய மாவட்ட செயலாளர்
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் ஊராட்சியில், அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை தொடர்ந்து திமுக சார்பில் இன்று (ஜனவரி 4) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன். கௌதமசிகாமணி நோட்டு பேனா வழங்கினார். உடன் திமுக ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.