விழுப்புரத்தில் புதிய எஸ்பி பொறுப்பேற்பு

79பார்த்தது
விழுப்புரத்தில் புதிய எஸ்பி பொறுப்பேற்பு
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்று புதிய எஸ்.பி.யாக பொறுப்பேற்ற பி. சரவணன் தெரிவித்தார். விழுப்புரம் எஸ்.பி.யாக இருந்த தீபக் சிவாச் அரியலூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.யாகப் பணியாற்றி வந்த பி. சரவணன் விழுப்புரம் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 

இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு வந்த அவர், மாவட்டத்தின் 24-ஆவது எஸ்.பி.யாகப் பொறுப்பேற்று, கோப்புகளில் கையொப்பமிட்டார். அவருக்கு கூடுதல் எஸ்.பி. திருமால், தனிப் பிரிவு உதவி ஆய்வாளர்கள் ரங்கராஜன், சேது, வீரமணி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி