கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சியில் 120 தூய்மை பணியாளர்கள் பணி புரிகின்றனர். இவர்கள் அனைவரும், பெஞ்சல் புயலின் போது இரவு பகல் பாராது தூய்மை பணியை மேற்கொண்டனர்.
இந்நிலையில், தூய்மை பணியாளர்களுக்கு, திருக்கோவிலூர் ரோட்டரி சங்கம் சார்பில் 120 தூய்மை பணியாளர்களுக்கும் சட்டை, புடவை, துண்டு ஆகிய நிவாரண பொருட்களை இந்திய ஜனநாயக கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவரும், பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொருளாளரும், திருக்கோவிலூர் ரோட்டரி சங்க தலைவருமான செந்தில்குமார் தலைமையில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் வழங்கினர்.
இந்த நிகழ்வில், திருக்கோவிலூர் நகராட்சி தலைவர், நகரமன்ற உறுப்பினர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.