திருக்கோவிலுார்: இருதரப்பினர் மோதல் 5 பேர் மீது வழக்கு

73பார்த்தது
திருக்கோவிலுார் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 34; இவரது மனைவி வெண்ணிலா, 26; இவர்களுக்கு 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. 6 வயதில் பூவரசி என்ற மகள் உள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக 2017 இல் இருந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பான ஜீவனாம்ச வழக்கு திருக்கோவிலுார் கோர்ட்டில் நடந்து வருகிறது.


கடந்த 27ம் தேதி இரு தரப்பினரும் விசாரணைக்காக கோர்ட்டிற்கு வந்து, வெளிவந்த போது மணிகண்டனை மனைவி வெண்ணிலா, மாமனார் வேல்முருகன், மாமியார் சித்ரா ஆகியோர் திட்டித் தாக்கிக்கினர். இம்மோதலில் மணிகண்டன் அவரது தந்தை குமாரசாமி இருவரும் வெண்ணிலாவை திருப்பித் தாக்கினர். இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி